ஒரு வருடத்திற்கு பிரதமர் உட்பட அனைத்து எம்.பிக்களுக்கும் 30% சம்பள குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு.!

0
ஒரு வருடத்திற்கு பிரதமர் உட்பட அனைத்து எம்.பிக்களுக்கும் 30% சம்பள குறைப்பு
ஒரு வருடத்திற்கு பிரதமர் உட்பட அனைத்து எம்.பிக்களுக்கும் 30% சம்பள குறைப்பு

கொரோனவால் ஊரடங்கு பிறப்பித்த நிலையில்   இந்தியாவின் பொருளாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் மக்கள்  வீட்டிலேயே இருப்பதால் அவர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு புதிய  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சம்பள குறைப்பு:

கொரோனா எதிரொலியாக பிரதமர் உட்பட  எம்.பிக்கள்  அனைவருக்கும் சம்பளத்திலிருந்து 30% குறைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும் என்றும் இந்த 30 சதவீத குறைப்பு ஏப்ரல் 1 முதல் ஓராண்டு நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் ரூ.7,900 கோடி சேமிக்கப்படும் என்றும், அந்த பணம் நாட்டின் ஒருங்கிணைந்த நிதிக்கு செல்லும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.