தள்ளிவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்..!

0
தள்ளிவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்..!
தள்ளிவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்..!

தமிழகத்தில் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட பள்ளித்தேர்வுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். இன்னும் பல கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.

அறிகுறி இல்லாமல் கொரோனா..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் தாங்களாகவே வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர்.

அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு தேடிச்சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்குவது கடினமானது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளித் தேர்வுகள்:

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 94 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு மற்றும் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் 72 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகு தான் பள்ளித்தேர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.