இறைச்சிக் கடைகளில் 30 நொடிக்கு மேல் மக்கள் நிற்கக்கூடாது, மீறினால் கடைக்கு சீல் – மாநகராட்சி அதிரடி உத்தரவு..!

0
இறைச்சிக் கடைகளில் 30 நொடிக்கு மேல் மக்கள் நிற்கக்கூடாது, மீறினால் கடைக்கு சீல் - மாநகராட்சி அதிரடி உத்தரவு..!
இறைச்சிக் கடைகளில் 30 நொடிக்கு மேல் மக்கள் நிற்கக்கூடாது, மீறினால் கடைக்கு சீல் - மாநகராட்சி அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது.  மேலும் கோவை மாநகரத்தில் வைரஸின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால் கோவை மாநகராட்சி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

உத்தரவின் விபரங்கள்:

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் இறைச்சிக் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.  அங்கு முறையான சமூக இடைவெளிகளை மக்கள் பின்பற்றுவது இல்லை.  மேலும் இறைச்சிகளும் தூய்மையான முறையில் விற்பனை செய்யப்படுவதில்லை.  எனவே கோவை மாநகராட்சி சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

இறைச்சிக் கடைகளில் மக்கள் அரை நிமிடத்திற்கு (30 வினாடி) மேல் நிற்கக்கூடாது.

மிகவும் குறுகலான இடங்களில் இறைச்சிக் கடைகள் நடத்த அனுமதி இல்லை.

கடைகளில் இறைச்சிகளை தொங்க விடுவதோ, மக்கள் முன்னிலையில் வெட்டிக் கொடுப்பதோ கூடாது.

மக்கள் வருவதற்கு முன்பே குடல்,  ஈரல், ரத்தம் போன்றவற்றை தனித்தனியாக பிரித்து வைத்திருக்க வேண்டும்.

முடிந்தவரை இறைச்சிகள் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யப்பட வேண்டும்.

விதிகளை மீறும் இறைச்சிக்கடைகள் சீல் வைக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து  உள்ளது.

Read More Latest Bank Jobs Details 2020

Read More Latest Defence Jobs Details 2020

Read More Latest Railway Jobs Details 2020

Read More Current Affairs Details 2020

Read More Latest Police Jobs Details 2020

To Follow Our InstagramClick Here
To Follow Our TwitterClick Here
To Join Whatsapp
Click Here
To Join Telegram Channel
Click Here
To Join Our FacebookClick Here