Pathupattu, Pathinenkilkanakku Noolgal and Authors in Tamil – TNPSC Group 4/VAO Study Plan!!!

0
Pathupattu, Pathinenkilkanakku Noolgal and Authors in Tamil
Pathupattu, Pathinenkilkanakku Noolgal and Authors in Tamil

பத்துப்பாட்டு நூல்கள் குறித்து விளக்குக:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழில் தோன்றிய நூல்களைச் சங்க இலக்கியங்கள் என்று கூறுவார்கள். இவற்றுள் மேற்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை அடங்கும்.

பத்துப் பாட்டு என்பது நூறு அல்லது அதற்கு மேலான அடிகளால் ஆன பத்து தனித்தனித் நூல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும்.

Best Coaching Classes for Group 1, 2, 4 & Others!!!

பத்துப்பாட்டு நூல்கள் யாவை in tamil:

  • திருமுருகாற்றுப்படை
  • பொருநராற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • மலைபடுகடாம்
  • குறிஞ்சிப்பாட்டு
  • முல்லைப்பாட்டு
  • பட்டினப்பாலை
  • நெடுநல்வாடை
  • மதுரைக்காஞ்சி

பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்:

நூல்கள் ஆசிரியர்கள்
திருமுருகாற்றுப்படை நக்கீரர்
பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங் கண்ணனார்
மலைபடுகடாம் பெருங்கௌசிகனார்
குறிஞ்சிப்பாட்டு கபிலர்
முல்லைப்பாட்டு நப்பூதனார்
நெடுநல்வாடை நக்கீரர்
மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனார்
பொருநராற்றுப்படை முடத்தாமக் கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை நல்லூர் நத்தத்தனார்
பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங் கண்ணனார்

பத்துப்பாட்டு நூல்கள் அகம் புறம் சார்ந்த நூல்கள்:

  • அகம் பற்றியவை = முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை
  • புறம் பற்றியவை = மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம், பொருநராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை & சிறுபாணாற்றுப்படை.
  • அகமா புறமா என்ற கருத்து வேறுபாட்டை உடைய நூல் = நெடுநல்வாடை

பத்துப்பாட்டு நூல்கள் அடிகள்:

நூல்கள் அடி அளவு
திருமுருகாற்றுப்படை 317
பெரும்பாணாற்றுப்படை 500
மலைபடுகடாம் 583
குறிஞ்சிப்பாட்டு 261
முல்லைப்பாட்டு 103
நெடுநல்வாடை 188
மதுரைக்காஞ்சி 782
பொருநராற்றுப்படை 248
சிறுபாணாற்றுப்படை 269
பட்டினப்பாலை 301

பத்துப்பாட்டு நூல்களின் வேறு பெயர்கள்:

நூல் வேறு பெயர்கள்
திருமுருகாற்றுப்படை
  • முருகு
  • புலவராற்றுப்படை
பொருநராற்றுப்படை ——
சிறுபாணாற்றுப்படை சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர்)
பெரும்பாணாற்றுப்படை
  • பாணாறு
  • சமுதாயப் பாட்டு
மலைபடுகடாம் கூத்தராற்றுப்படை
குறிஞ்சிப்பாட்டு
  • பெருங்குறுஞ்சி (நச்சினார்கினியர், பரிமேழலகர்)
  • களவியல் பாட்டு
முல்லைப்பாட்டு
  • நெஞ்சாற்றுப்படை
  • முல்லை
பட்டினப்பாலை
  • வஞ்சி நெடும் பாட்டு (தமிழ் விடு தூது)
  • பாலைபாட்டு
நெடுநல்வாடை
  • பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
  • மொழிவளப் பெட்டகம்
  • சிற்பப் பாட்டு
மதுரைக்காஞ்சி
  • மாநகர்ப்பாட்டு (ச.வே.சுப்பிரமணியன்)
  • கூடற் தமிழ்
  • காஞ்சிப்பாட்டு

TNPSC Online Course Pack