கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14 தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் உயிரிழந்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு..!
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முக்கிய தலைநகரங்களில் பணியாற்றிய இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டது. போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கூட்டம் கூட்டமாக தொழிலாளர்கள் பல கிலோமீட்டர்கள் நடந்தே சென்றனர். டெல்லியில் இருந்து தொழிலாளர்கள் 500, 600 கிலோமீட்டர்கள் நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக மாணவர் உயிரிழப்பு..!
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து சில தமிழர்கள் 30 பேர் நடந்தே வர முயற்சி செய்துள்ளனர். அப்படி வந்தவர்களில் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். பாலசுப்பிரமணி லோகேஷ் வயது 22 இவர் மகாராஷ்டிரா வர்தா பகுதியில் பயிற்சி பெற்று வந்துள்ளார். நாமக்கல் நோக்கி வரும் லாரிகளில் லோகேஷ் உட்பட 30 பேரும் பயணித்தததாக தெரிகிறது. தெலுங்கானா பவன்பாலிக்கு வரும் போது 30 பேரும் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். பள்ளிப்பாளையத்தை சேர்ந்த லோகேஷ் உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார்.
Read More Latest Bank Jobs Details 2020
Read More Latest Defence Jobs Details 2020
Read More Latest Railway Jobs Details 2020
Read More Current Affairs Details 2020
Read More Latest Police Jobs Details 2020
To Follow Our Instagram | Click Here |
To Follow Our Twitter | Click Here |
To Join Whatsapp | Click Here |
To Join Telegram Channel | Click Here |
To Join Our Facebook | Click Here |