சிந்து சமவெளி நாகரிகம் TNPSC Questions With Answers PDF Download!!!

0
சிந்து சமவெளி நாகரிகம் TNPSC Questions With Answers PDF Download!!!
சிந்து சமவெளி நாகரிகம் TNPSC Questions With Answers PDF Download!!!

Sindhu Samaveli Nagarigam History in Tamil TNPSC

வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளை உள்ளடக்கிய தொகுப்பாகும். வரலாறு என்பது கிரேக்கச் சொல்லான ‘இஸ்டோரியா’ (Istoria) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் “விசாரிப்பதன் மூலம் கற்றல்” என்பதாகும்.

சிந்து சமவெளி நாகரிகம்:

 • சிந்து சமவெளி நாகரிகம் இந்தியாவில் தோன்றிய முதல் நகர நாகரிகம் ஆகும். இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலும் பாகிஸ்தானிலும் பொ.ஆ.மு. 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமாகச் சிந்து நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது.

சிந்து சமவெளி காலம்:

சிந்து சமவெளி நாகரிக காலம் பொதுவாக மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.

 • ஆரம்ப நிலை கி.மு.3300 – கி.மு.2600
 • முதிர்வு நிலை கி.மு.2600 – கி.மு.1900
 • பிந்தைய நிலை கி.மு.1900 – கி.மு.1700

சிந்து சமவெளி அறிஞர்கள் பெயர்கள்:

அறிஞர்கள் காலம்
சர்ஜான் மார்ஷல் (1921) கிமு.3250 முதல் கி.மு. 2750 வரை
போர்சர்வ்ஸ் (1956) கிமு.2000 முதல் கி.மு. 1500 வரை
டி.பி.அகர்வால் (1964) கிமு.2300 முதல் கி.மு. 1750 வரை
 • நாகரிகம் என்ற வார்த்தை பண்டைய லத்தின் மொழி வார்த்தையான சிவிஸ் (Civis) என்ற சொல்லிருந்து வந்தது.
 • சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நகரம் ஹரப்பா ஆகும். இதன் காரணமாவே இந்நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கபடுகிறது.

ஹரப்பா நாகரிகத்தின் கால கட்டங்கள்:

 • தொடக்க கால ஹரப்பா – பொ.ஆ.மு.3000 – 2600
 • முதிர்ச்சி அடைந்த ஹரப்பா – பொ.ஆ.மு.2600 – 1900
 • பிற்கால ஹரப்பா – பொ.ஆ.மு.1900 – 1700

தொடக்ககால ஹரப்பா: பொ..மு 3000- 2600 வரை

 • கிராமங்களும் நகரங்களும் வளர்ச்சி அடையத் தொடங்கின.
 • மக்கள் வணிகத் தொழிலை மேற்கொண்டனர். கலைகளும் கைவினைப்பொருட்கள் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.

முதிர்ச்சி அடைந்த ஹரப்பா: பொ..மு 2600 – 1900 வரை

 • நகரங்கள் நன்கு வளர்ச்சி அடைந்தன.
 • வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.
 • வணிகம் மக்களின் முக்கிய தொழில் ஆனது.

பிற்கால ஹரப்பா: பொ..மு 1900 – 1700  வரை

வணிகம் சரிய தொடங்கியதால் நகரங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

சிந்துவெளி அகழ்வாராய்ச்சி கட்டுரை:

 • 1826-ல் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சார்லஸ் மேசன் ஹரப்பாவில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டார்.
 • 1831-ல் அலெக்ஸாண்டர் பர்னஸ் என்பவர் ஆம்ரி என்ற இடத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டார்.
 • 1853, 1856, 1875 ஆண்டுகளில் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் ஹரப்பா மற்றும் மொகங்சதரோ பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
 • 1856ல் பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதிக்கரையின் கிளை நதியான ராவி நதிக்கரையில் லாகூரில் இருந்து முல்தானுக்கு இருப்புப்பாதை அமைக்க தோண்டப்பட்டபோது சுட்ட செங்கற்களும், கட்டிட இடிபாடுகளும் கண்டறியப்பட்டது.
 • 1920களில் சர் ஜான் மார்ஷல் என்பவர் ஹரப்பா பகுதிகளில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டார்
 • 1921ல் ஹரப்பாவில் தயாராம் சஹானி என்பவர் அகழ்வாய்வு மேற்கொண்டார்.
 • 1922ல் மொகங்சதரோவில் R.D.பானர்ஜி என்பவர் அகழ்வாய்வு மேற்கொண்டார்.
 • 1940 களில் மோர்டிமர் வீலர் என்பவர் ஹரப்பா பகுதிகளில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டார்.
 • 1957ல் லோத்தலில் S.R.ராவ் என்பவர் அகழ்வாய்வு மேற்கொண்டார். B.B.லால் என்பவர் காளிபங்கனில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டார்.

கால வரையறை:

புவி எல்லை தெற்கு ஆசியா
காலப்பகுதி வெண்கலக்காலம்
பரப்பு 13 லட்சம் சதுர கி.மீ
நகரங்கள் 6 பெரிய நகரங்கள்
கிராமங்கள் 200க்கும் மேற்பட்டவை

சிந்து நாகரிக நகரங்கள்:

 • ஹரப்பா
 • மொஹஞ்சதாரோ
 • தோலாவீரா
 • லோத்தல்
 • சுர்கொடா
 • காலிபங்கன்
 • பானவாலி
 • ராகிகரி
நகரங்கள் அமையபெற்ற இடம்
ஹரப்பா பாகிஸ்தான், மேற்கு பஞ்சாப், மாண்ட் கோமாரி, ராவி நதிக்கரை
மொகஞ்சதாரோ பாகிஸ்தான் – சிந்து மாகாணம் – லர்கானா – சிந்து நதிக்கரை
கோட்டிஜி சிந்து மாகாணம்
காலிபங்கன் ராஜஸ்தான்
லோதல் குஜராத்
தோலவிரா குஜராத்
சூர்கோட்டா குஜராத்
ஆலம்கீர் உத்திரபிரதேசம்
ரூபார் பஞ்சாப்
பனவாலி ஹரியானா

 கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்:

இடம் ஆண்டு கண்டுபிடித்தவர் நதி
ஹரப்பா 1921 தயாரம் சாஹ்னி ராவி
மொஹஞ்சதாரோ 1922 ஆர்.டி.பானர்ஜி சிந்து
சன்ஹுடாரோ 1931 மஜும்தார் சிந்து
லோதல் 1945 ராவ் போகாவோ
காளிபங்கன் 1961 லால் காகர்
தோலவீரா 1991 ஜோஷி சரஸ்வதி

Best Coaching Classes for Group 1, 2, 4 & Others!!!