மக்களுக்காக அனைவரும் ஒரு வேளை உணவை விட்டுக் கொடுங்கள் – பிரதமர் மோடி ட்விட்..!

0
மக்களுக்காக அனைவரும் ஒரு வேளை உணவை விட்டுக் கொடுங்கள் - பிரதமர் மோடி ட்விட்..!
மக்களுக்காக அனைவரும் ஒரு வேளை உணவை விட்டுக் கொடுங்கள் - பிரதமர் மோடி ட்விட்..!

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அதை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் உணவு இன்றி தவித்து வருகின்றனர். இதை பற்றி பிரதமர் மோடி ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி..!

ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வருமானம் இன்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் மக்கள் அன்றாட உணவிற்கு கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு உதவும் பொருட்டு மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பகுதியில் அறிவித்திருந்ததாவது, ஊரடங்கால் மக்கள் கஷ்டங்களை உணர்ந்து ஒரு வேளை உணவை விட்டு கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அனைத்து  பாஜக நிர்வாகிகளும் உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜகவின் 40-வது ஆண்டு நிறைவு தினத்தை பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.