மோசமடையும் இங்கிலாந்து பிரதமரின் உடல்நிலை – கொரோனவால் மருத்துவமனையில் அனுமதி..!

0
மோசமடையும் இங்கிலாந்து பிரதமரின் உடல்நிலை - கொரோனவால் மருத்துவமனையில் அனுமதி
மோசமடையும் இங்கிலாந்து பிரதமரின் உடல்நிலை - கொரோனவால் மருத்துவமனையில் அனுமதி

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை அவரே உறுதி செய்துள்ளார். அதனையடுத்து, வீட்டிலேயே தான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 10 நாட்களாக தொடர்ந்து அவரது உடல்நிலை அதிக வெப்பநிலையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து vs கொரோனா:

இங்கிலாந்தில் கொரோனாவால் 11,600 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் உயிரிழந்தோர் 578 பேர் ஆவர். சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா தொற்று வந்தது. அதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 55 வயதான போரிஸ் ஜான்சனுக்கு கடந்த 10 நாள்களுக்கு முன்பு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனைக்காக பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பத்து நாள்கள் ஆன நிலையிலும் வைரஸ் பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அடுத்த Attack:

இந்தநிலையில், இங்கிலாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்காக்குக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பதிவில், ‘தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதித்துள்ள பதிவிட்ட வீடியோவிற்கு இவர் ‘நீங்கள் மிகச்சிறந்த போராளி. நீங்கள் சவாலில் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்துகொள்கிறேன். இங்கிலாந்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதைப் பாராட்டுகிறேன்’ என்று பதிலளித்து உள்ளார்.